“சிந்திக்க வைக்கும் படம்; முன்வைக்கும் கேள்விகள் நியாயமானது” – சக்தித் திருமகன் படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு!.

prime9logo
193 Views
1 Min Read

சக்தித்  திருமகன் படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அருண்பிரபு இயக்கித்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் சக்தித்  திருமகன். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்போது இந்த படம் ஓடிடி-ல்  வெளியாகி இருக்கும் நிலையில், தமிழின் முன்னணி இயக்குனர் ஷங்கர் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” ஓடிடி-ல் சக்தித்  திருமகன் படத்தை பார்த்தேன். சிந்திக்கவைக்கும் படம். 

 படத்தில் இயக்குனர் முன்வைக்கும் கேள்விகள் நியாயமாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. பல பிரச்சனைகள் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. 

  கதையின் தீவிரம் எதிர்பாராத வண்ணம் கூடிக்கொண்டே செல்கிறது.
 இயக்குனர் அருண்பிரபு,  நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் ” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply