கதையின் நாயகனாக கவின் நடிக்கும் படத்துக்கு, ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பசுபதி நடித்த ‘தண்டட்டி’ படம் மூலம் கவனம் ஈர்த்த ராம் சங்கையா இப்படத்தை இயக்குகிறார்.
இதில் கவின் ஜோடியாக சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி நடிக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக் ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.
ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் தமிழ், தியாக ராஜன் குமாரராஜா, ஆண்ட்ரூ லூயிஸ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

