செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,

“நாங்கள் ஏற்கெனவே, கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை பாதிப்புகளை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம்.

 

அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை.

 

வரக்கூடிய. காலக்கட்டத்தில், அதையும் முடித்துவிடுவோம். எனவே, நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

 

தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் முழு மூச்சாக மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த பணிகளில் ஈடுப்பட்டு வெற்றிகண்ட அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

 

இந்த ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here