வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜிக்கு பதில் அறிமுகமாகிறது எத்தனால்

Priya
65 Views
1 Min Read

யோக நிறு​வனங்​களின் கூட்டமைப்புகளும் அரசுடன் இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன. இக்​கொள்கை வரும் செப்​டம்​பர் மாதத்துக்குள் தயா​ராகி​விடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்தியா​வில் எத்​த​னால் உற்​பத்​தித் திறன் கணிச​மாக அதிகரித்துள்ள நிலை​யில் இந்த முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது. ‘கேர்​-எட்ஜ் ரேட்​டிங்​ஸ்’ அறிக்​கை​யின்​படி, எத்​த​னால் உற்​பத்தி திறன் ஆண்​டுக்கு 2,000 கோடி லிட்​டரைத் தாண்​டி​யுள்​ளது.

அரசின் வழி​காட்​டு​தலின்​படி, எத்​த​னாலில் இயங்​கும் சமையல் அடுப்​பு​கள் ஏற்​கெனவே சோதனை செய்​யப்​பட்டு வரு​கின்​றன. பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​களும் இதற்​கான ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளன. மேலும், பெட்ரோல் பங்​கு​களில் எத்​த​னால் விநி​யோக மையங்​களை அமைக்க எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வுறுத்​தப்​படலாம். நுகர்வோர் இந்த ஏடிஎம்​கள் மூலம் சிறிய கேன்​களில் எத்​த​னாலை வாங்​கிச் சென்று சமையலுக்​குப் பயன்​படுத்​திக் கொள்ள முடி​யும்.

எல்​பிஜி இறக்​கும​திக்கு இந்​தியா இன்​ன​மும் வளை​குடா நாடுகளையே பெரிதும் நம்​பி​யுள்​ளது. இந்​நிலை​யில், சமீபத்​தில் மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்ட போர் இந்​தி​யா​வின் எல்​பிஜி விநியோகத்​தைப் பாதித்​தது. இதையடுத்​து, எல்​பிஜிக்கு மாற்​றாக உள்​நாட்டு எத்​த​னாலைப் பயன்​படுத்​து​வது நாட்​டின் ஆற்​றல் பாதுகாப்​புக்கு மிக​வும் நல்​லது என நிபுணர்​கள் கருதுகின்​றனர். மாற்று சமையல் எரிபொருட்​களுக்கு மாறு​வ​தால் சுமார் ரூ.2 லட்சம் கோடியை சேமிக்க முடி​யும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply