சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை!!

Priya
5 Views
1 Min Read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதாவது, நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,330க்கும் சவரன் ரூ.1,14,640க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.300க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,560 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,23,200க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கு விற்கப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கு விற்கப்பட்டது.

அரசியல் பகுப்பாய்வுஇந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு 8,560 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.3,200 குறைந்துள்ளது. தங்கம் விலையில் சவரனுக்கு 3,200 குறைந்து ரூ. 1,20,000க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.320க்கு விற்பனையானது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலை ரூ.10 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15050க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply