#நம்புங்கள்.. கடவுள் இருக்கிறார் -5

ஒரு வழியாக அனைவரும்… ரிச்சர்ட் கூறிய அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். 

நாங்களும் எங்கள் பீரைக் குடித்து முடித்தோம்.

மீண்டும் அங்கிருந்து கேபிள் காரில் கீழிறங்க வேண்டும்..

கேபிள் காரில் ஏறி அமர்ந்தேன்..ஏறும் போது இருந்த பயத்தினை விட, இறங்கும் போது அதிகமாக இருந்தது. 

நான் பயந்து கத்தியதைப் பார்த்து என்னுடன் பயணித்த அனைவரும் சிரித்தனர்.. 

சிரிக்கட்டும்… 

பயம்தான் ஒரு மனிதனை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது.. அந்த பயம் என்னோடு இருந்துவிட்டு போகட்டுமே… 

கேபிள் காரில் கீழே இறங்கி மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்..

2b

அனைவரும் இரவு உணவு உண்பதற்காக சிட்டியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்..

அவரவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தபடி மிகவும் சந்தோஷமாக பேசி சிரித்தபடி பயணித்துக் கொண்டு வந்தனர்.. 

அந்த இரவுப் பொழுதின் அழகை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தேன்… 

30 நிமிடங்கள் கடந்து விட்டது.. உள்ளூர் கெய்டு ரிச்சர்ட் அடுத்த நாள் பயணத் திட்டத்தினைப் பற்றி பேச ஆரப்பித்தார்… 

அப்போது பேருந்தினுள் ஒரு சலசலப்பு… இதனால் பேச்சை நிறுத்தினார்.. 

என்ன என்று விசாரிக்கும் போது கிஷானின் செல்போன் காணவில்லை… என்று தகவல் கிடைத்தது.. 

பேருந்து முழுக்க தேடி முடிந்தனர்.. எங்கேயும் தட்டுப்படவில்லை… 

தொலைத்த இடத்தில் தேடினால் தானே எந்த பொருளானாலும் கிடைக்கும்…

கிஷானுக்கோ… எங்கே தொலைத்தோம் என்பதே தெரியவில்லை.. 

கெண்டிங் ஐலாண்டில் தொலைத்திருந்தால் கூட பேருந்து இனிமேல் அங்கு திரும்பிப் செல்வதென்பது இயலாத காரியம்.. 

பேருந்து சிட்டியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது….

இது சாதாரண விலை உள்ள செல்போனாக இருந்திருந்தால் கிஷான் இதை விட்டிருக்கலாம்.. ஆப்பிள் போன்… விலை 1.30 லட்சம்… அதெப்படி விட மனசு வரும்..

எந்தெந்த வழியிலெல்லாம் தேடலாம் என ஆராய்ந்தனர்… எங்கு கடைசியாக புகைப்படம் எடுத்தார்கள்.. என்று அவர்கள் யோசித்து… ஒரு வழியாக கேபிள் காரில் தான் காணாமல் போயிருக்கும் என்பதை கண்டுபிடித்தனர்.. 

சரி.. கேபிள் காரில் தொலைந்திருந்தாலும் கூட அதை எப்படி கண்டுபிடிப்பது.. நொடிக்கொரு கேபிள் கார் வீதம் ஆயிரத்துக்கும் அதிகமான கேபிள் கார்கள் அங்கு பயணித்துக் கொண்டே இருக்கிறதே… 

போனது போனதுதான்… இனி கிடைக்காது என்பதே அனைவருடைய எண்ணமாக இருந்தது.. 

இதை கிஷான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்… வேறு வழியே இல்லை… 

சிறிது நேரம் தங்களுக்குத் தெரிந்த டெக்னாலஜியை வைத்து செல்போன் இருக்கும் இடத்தை அறிய முயற்சித்தனர். 

அந்த காசினோவின் தொடர்பு எண்கள் கிடைக்குமா என தேடினார்கள்… 

ம்ம்…ஹூம்…. நோ யூஸ்… 

கிஷான் தன்னுடைய எண்ணிற்கே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான்.. மறுமுனையில் செல்போனை யாரும் எடுக்கவில்லை… 

இதுக்கப்பறம் அவ்வளவுதான்… 

கிஷானுடைய செல்போனுக்கு ஒரு இரங்கற் பா பாடி இந்த எபிசோடை முடிச்சுக்கலாம்…

பேருந்து சாப்பிட வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தாச்சு… 

இனிமேல் உணவை முடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.. 

முன்னர் இருந்த கலகலப்பு பேருந்தில் இல்லை.. யாரும் சிரித்துக் கூடப் பேசிக்கொள்ளவில்லை… ஒரு நிசப்தமான அமைதி அங்கு நிலவியபடியே இருந்தது..

கிஷான்… எவ்வளவு ஆசையாக அந்த செல்போனை வாங்கியிருப்பான்.. இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பானென்று நினைக்கும் போது… 

வெய்ட்… வெய்ட்… கஷ்டத்துல இருக்கும் போது கடவுள் சோதிக்கத்தானே செய்வாரு… கைவிடுவாரா…? 

அப்படினா.. போன் கிடைச்சிருமா? கிடைச்சிட்டா கடவுள் இருக்கிறதை நான் நம்புவேன்பா…னு சொல்றவங்களுக்கு ஒரு ஸ்மால் மெஸேஜ்.. 

‘கடவுள் இருக்கான் குமாரு’

கிஷான் போனின் அழைப்பு எடுக்கப்பட்டது…  மறுமுனையில் யாரோ எடுத்து பேசினார்கள்.. போனை பத்திரமாக எடுத்து வைத்திருக்காங்களாம்…வந்தா வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க… 

இதை நம்பவே முடியாதுதான்.. But இந்த உண்மையை நீங்க நம்பித்தான் ஆகனும்… 

Because வாழ்க்கைங்கறதே அடுத்து என்ன நடக்கும்னு தெரியாத ஒரு சுவாரஸ்யமான Drama… 

இதை பார்த்து ரசிக்கலாம்.. மாற்ற முடியாது.. 

பேருந்து எங்களை உணவத்தில் இறக்கி விட்டது… 

நாங்கள் உணவுக்காக ஹோட்டலை நோக்கி நடந்து சென்ற அதே நேரத்தில், கிஷான் தன் செல்போனை எடுப்பதற்காக கெண்டிங் ஐலாண்டை நோக்கி டாக்சியில் சென்று கொண்டிருந்தான்… 

உண்மையான உழைப்பு வீணாகாது.. உழைத்து வாங்கிய பொருள் நம்மை விட்டு எங்கும் போகாது…. 

கிஷானுடய உழைப்பும் வீண் போகவில்லை.. அவனுடைய செல்போன் அவனுக்கு கிடைத்து விட்டது..

சரி டைம் ஆகிருச்சு… நான் சாப்பிட்டு வந்து மிச்ச கதையை சொல்லட்டுமா..?

 

-தொடரும்-

 

ர-ஆனந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here