‘கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், மதுபானம் காய்ச்சும் நிலை உள்ளது’ என, உயர்நீதிமன்றம் கூறியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., , விசாரணை மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒற்றை நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 01) சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் ,இப்பகுதியில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாங்கள் தலையிட்டோம். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மத்திய, மாநில பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.