உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதல்-அமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதல்- அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.