மாநிலங்களவையில் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படுவது குறித்து எம்.பி. சமிக் பத்தாச்சாரியா எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டில் தேசிய அளவில் நகர்ப்புற பகுதிகளில் தினசரி 23.4 மணி நேரமும், கிராமப்புறங்களுக்கு 21.9 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டிலே அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை வழங்கும் மாநிலங்களில் 23.8 மணி நேர சராசரி மின்சாரத்துடன் மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தும் (23.7), ஆந்திராவும் (23.6) தமிழ்நாடும் (23.5) உள்ளது.