டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை கவர்னரிடம் இன்று சமர்ப்பிக்கிறார்.

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால், சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதையடுத்து கிட்டத்தட்ட 6 மாத காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். முதலமைச்சர் அலுவலகம் செல்ல வேண்டாம்; ஆவணங்களில் கையெழுத்திடக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் திடீரென அறிவித்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெளத், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
இன்று மாலை 4 மணிக்கு கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here