‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார்.
இந்நிலையில், இன்று(17.09.2024) தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.