தமிழக அரசு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கைத்தறித் துறை பணியாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாவதாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கதவைத் தட்டியிருக்கும் அவலம், தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தில் அரசு ஊழியர்கள் ஒருவர் புகார் அளித்திருப்பது இதுவே முதல் முறை.
மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள், தி.மு.க.,வால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் கைத்தறித் துறை பணியாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அனைத்து தொழில்களிலும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. முதல்வர் தனிப்பிரிவிலேயே 25க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.