மாங்காடு மாவட்டம், சார்லஸ் நகர், கொலுமணிவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த துஜேஷ் என்பவரை நடைப்பயிற்சிக்கு சென்ற உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி ராட்வீலர் சிறுவனை கடித்து குதறியது.இதனால் பலத்த காயமடைந்த சிறுவன் துஜேஷ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் வைத்திருப்பவர்கள் தங்கள் நாயின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களை நாய் கடித்தால், நாய் உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவுரை வழங்கியது தெரிந்ததே. இந்த நிலையில் எச்சரிக்கையும் மேரி கவனக்குறைவாக நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நாயின் உரிமையாளர் மீது வழக்குகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.