“தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும்” – விஜய் ஆண்டனி

Priya
14 Views
1 Min Read

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘பூக்கி’.

அஜய் திஷான் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை, கணேஷ் சந்திரா இயக்கியுள்ளார். ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படம், காதலர் தினக் கொண்டாட்டமாக வருகிற பிப்ரவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, “நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள்.

மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்புக்குழு அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படம் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply