வெற்றிமாறன் – சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

Priya
929 Views
1 Min Read

சிலம்பரசன் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அரசன்’ செயல்பாட்டுக்குத் திரும்பி விட்டான் எனக் குறிப்பிட்டு, சிலம்பரசனும் வெற்றிமாறனும் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘அரசன்’. வெற்றிமாறனின் ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிலம்பரசன் மூன்று வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply