ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று கபடியில் தங்கம் வென்றார் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா . அரசு பள்ளியில் படித்து, தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பனி நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.

