அரசு கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நேரடி நியமனம் -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

உதவிப் பேராசிரியர் பணி கனவு: தமிழக அரசு கல்லூரிகளில் 2708 பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை வெளியீடு.

Surya
81 Views
1 Min Read
ஆசிரியர் தேர்வு வாரியம்
Highlights
  • 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் புதிய அறிவிக்கை வெளியீடு
  • ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • விண்ணப்ப செயல்முறை 17.10.2025 முதல் 10.11.2025 வரை இணையதளம் (trb.tn.gov.in) வாயிலாக நடைபெறும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப 

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.

 தற்போது, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் :https://www.trb.tn.gov.in  வாயிலாக அரசு கல்லூரிகளுக்கான 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி. வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் மேலும், அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க (Online Application) 17.10.2025 5 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in  இணையதளத்தை பார்வையிடவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply