புவிசார் குறியீடு என்பது அந்தந்த நிலப்பரப்பில் மட்டும் கிடைக்கும் பிரத்யேகமான பொருட்களுக்கு வழங்கப்படுவது. உதாரணமாக மதுரை மல்லி, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் ஒடிசாவின் “காய் சட்னி” என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகவே உலகெங்கும்  இருந்து வருகிறது. ஒடிசாவின் மையூர்பஞ்ச் மாவட்டத்தில்  காய்ச் சட்னி என்று அழைக்கப்படும் ஒரு வகையான உணவு சிவப்பு எறும்புகளினால் தயாராகிறது என்று உங்களுக்கு தெரியுமா? 

sivappu 2

இந்த பகுதியில் இருக்கும் சிவப்பு எறும்புகள் கடித்தால் மிகுந்த வலியையும் கொப்புளங்களையும் ஏற்படுத்திடும். அப்படியிருந்தும் இந்தவகை எறும்புகளில் எப்படி சட்னி செய்யப்படுகிறது என்று நீங்கள் கேட்பீர்களானால் வேறென்ன தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தான்  .. 

அங்குள்ள பழங்குடி மக்கள் தங்களிம் வாழ்வியல் தேவைகளுக்காக இந்த வகை எறும்புகளை சேகரித்து அதில் மிளகாய், இஞ்சி, பூண்டு , உப்பு போன்றவற்றை பயன்படுத்தி அரைத்து அதனை கலவையாக்கி அரைத்திடமான தன்மையில் சட்னியாக்கி விற்கிறார்கள். 

sivappu

இந்த சட்னி ஜார்கண்ட், சட்டிஸ்கர் போன்ற கிழக்கு மாநிலங்களில் தாராளமாக கிடைக்கின்றன.மருத்துவ குணம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சிவப்பு எறும்பு சட்னி அப்பகுதியில் புகழ்பெற்றது விளங்குகிறது.இந்த எறும்பு சட்னியில் புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி12,இரும்புச்சத்து மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தனித்துவமான சட்னி மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் போன்றவற்றிற்கும்  உதவியாக இருக்கிறது.பல்வேறு ஆராய்ச்சியின் முடிவுகள் பூச்சிகளின் புரதங்கள், மோசமான சுற்றுச் சூழல் அமைப்பிலிருந்து நம்மை பாதுகாப்பதாக  தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here