ரொம்ப நாளாவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை நீடிச்சிகிட்டு வருது… இதுபோதாதுனு இப்ப புதுசா ஒரு பிரச்சனை உருவாகியிருக்கு…
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் (Aksai Chin) என்ற நிலப்பகுதி அமைஞ்சிருக்கு. இந்த பகுதி யாருக்கு சொந்தம்னு நீண்ட காலமா சர்ச்சை நீடிச்சிகிட்டு வருது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் இந்தப் பகுதிய, தற்போது சீனா ஆக்கிரமிச்சிருக்கு.
ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பகுதிய He’an County மற்றும் Hekang County என சீன அரசு குறிப்பிட்டு, இரண்டு புதிய மாவட்டங்களா அறிவிச்சிருக்கு. இந்த இரண்டு மாவட்டங்களும் சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில அடங்குமாம். இதுதொடர்பான அறிவிப்பையும் சீனா அதிகாரபூர்வமா வெளியிட்டிருக்கு.
ஏற்கனவே கடந்த 2021ல இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுக்கு அடுத்ததா 2023ம் ஆண்டுல, சீனா புதிய வரைபடம் ஒன்ன வெளியிட்டு, அதுல ஆக்கிரமிப்புல வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்ஷயா சின்’ எனவும், அருணாச்சல பிரதேச மாநிலத்தை, ‘தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டிருந்தது. இதுபோதாதுனு கடந்த ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில இருக்கும் 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது.
இப்படி பல விஷயங்களை சீனா, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செஞ்சிட்டு வரும் நிலையில, இப்ப வந்திருக்கும் இந்த புதிய அறிவிப்பு இந்திய அரச பெரும் கோபத்திற்கு உள்ளாகியிருக்கு. இது லடாக்கில் செய்யப்படும் அத்துமீறல்ன்னும் இந்தியா கடும் கண்டனம் தெரிவிச்சிருக்கு.