இன்றைய ராசிபலன்: மார்ச் 26, 2026 – உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன?

மார்ச் 26, 2026 அன்று உங்கள் ராசிக்கான முழுமையான தினசரி பலன்கள் இங்கே.

prime9logo
98718 Views
3 Min Read
Highlights
  • கடகம், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
  • மிதுனம், விருச்சிகம், கும்பம், மீன ராசிகளுக்கு புதிய வாய்ப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.
  • சில ராசிகளுக்கு பணப் பிரச்சனை, குடும்ப உறவுகள், மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மார்ச் 26, 2026 அன்று ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை இங்கே காணலாம். மேஷம் முதல் மீனம் வரை, அனைத்து ராசிக்காரர்களுக்கும் தொழில், நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியம் என அனைத்து அம்சங்களிலும் இன்றைய நாள் எப்படி அமையும் என்பதை ஜோதிட வல்லுநர்களின் கணிப்பின் அடிப்படையில் நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். இந்த தினசரி ராசிபலன், உங்கள் நாளைத் திட்டமிடவும், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்.
ராசி வாரியான விரிவான பலன்கள்

  • மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • ரிஷபம்: இன்று மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆலோசனை கிடைக்கும். வேலை தொடர்பாக இன்று வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பத்தைப் பிரியக் கூடிய மனக்கவலை ஏற்படும்.
  • மிதுனம்: இன்று தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், விருந்துக்கு ஏற்பாடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • கடகம்: இன்று முக்கிய வேலைகளை ஒத்திவைக்க வேண்டும். பணம் தொடர்பான எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். அறிவுசார் பணிகளிலிருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு. தொழில் நிமித்தமாக பயணம் செய்வது நன்மை பயக்கும். கோபத்தைத் தவிர்க்கவும்.
  • சிம்மம்: இன்று உங்களுக்குக் கவலை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை குறைபாடு இருக்கும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஏதாவது ஒரு மத இடத்திற்குச் செல்லலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
  • கன்னி: இன்று உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிதி ஆதாரம் வலுப்பெறும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள்.

கவனம் தேவை யாருக்கு?

  • துலாம்: இன்று நீங்கள் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்கு ஆராயுங்கள். குடும்பத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பது அவசியம்.
  • தனுசு: இன்று உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவரும் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். உங்களின் நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பி வர கால தாமதம் ஏற்படலாம்.

நற்பலன்கள் யாருக்கு?

மீனம்: உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். பணப்புழக்கம் சீராக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: இன்று உங்கள் செயல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு பாராட்டப்படும். நிதி நிலைமை வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மகரம்: இன்று உங்கள் திறமைகள் வெளிப்படும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சேமிப்பை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் துணையுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சட்டச் சிக்கல்கள் தீரும்.

கும்பம்: உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். பணப்புழக்கம் சீராக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply