இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டத்தொடருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பேரவைக்கு வருகை தந்தார்.
அவரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் கூட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்என் ரவி உரையை புறக்கணித்து பேரவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. எனவும் தான் அவைக்கு வந்த போது, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்ததாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.