தெலுங்கு நடிகரான நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக அன்னபூர்ணா ஸ்டூடியோவானது விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் முதல் திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதோடு, நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா மணமக்களை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அவர்களது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

திருமணம் குறித்து நாகர்ஜூனா கூறியிருப்பதாவது இந்த அழகான அற்புதத்தை இருவரும் ஒன்றாக தொடங்குவதை பார்ப்பது என்பது எனக்கு ஒரு உணர்சிகரமான தருணமாக இருந்தது.

அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட அவரின் திருவுருவ சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த அற்புதமான கொண்டாட்டம் வாழ்க்கையில் ஆனந்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் ஆசியும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்ப பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், நாக சைதன்யா தனது திருமணத்திற்கு பாரம்பரிய உடை அணிந்து, தனது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவை கௌரவித்தார். இந்த திருமணத்தில் நடிகர் சிரஞ்சிவீ உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here