பூமியை தாண்டி, நமது சூரிய குடும்பத்தை தாண்டி விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிரகங்களும், சிறு கோள்களும் இருக்கின்றன. அத்துடன் பல லட்சம் விண்கற்களும் சுற்றி வருகின்றன. இந்நிலையில், சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 9.45 மணிக்கு இந்த சிறுகோள் பூமியை நெருங்கும். இதன் விட்டம் வெறும் 70cm என்பதால் இந்த சிறுகோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும் ஆனால், மிகவும் நெருக்கமாக வராது என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய கட்டிடம் அளவிலான இந்த சிறுகோள் ஆபத்தானதாக இருந்தாலும், பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது, ரஷ்யாவை நோக்கியே இந்த சிறுகோள் சீறிப்பாய்ந்து வருவதாகவும், விட்டம் குறைவாக இருப்பதால் இப்போதைக்கு பேராபத்து இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.