அரசு பள்ளிகளில் மோசடிகள் தொடர்கதையாகி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் முறைகேடாக மாணவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள், அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் ஆய்வு மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வர். மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வுசெய்து, அறிக்கையை 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.