சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 6,885 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமையான இன்று, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, 6960 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 55,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.