ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கூகுள் மேப் தற்போது மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது கூகுள் மேப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய அம்சங்கள், அதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

அதன்படி மேப் லென்ஸ் மேம்பாடு (lense Integration), முகவரி விளக்கம் (address descriptors), நடைப்பயண வழிகாட்டி (Live view walking navigation) ஆகிய மூன்று அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலமாக கூகுள் மேப்பினை பயன்படுத்தி நடக்கும் பயனர்கள் மிகச் சரியான முகவரிக்கு சென்று சேர இந்த அம்சங்கள் உதவி செய்யும்.

இந்தியாவில் மட்டும் கூகுள் மேப் செயலியில் நாள்தோறும் சராசரியாக 5 கோடி மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here