சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைக்கட்டனத்தை 11 முதல் 25 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதைதொடர்ந்து , பொதுத்துறை நிறுவனமான BSNL மலிவு விலையில் பல சேவைகளை வழங்கி வருகிறது . அதனால் லட்சக்கணக்கான மக்களின் பார்வை BSNL பக்கம் திரும்பியது.
இதை தொடர்ந்து BSNL 4G சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது மற்றும் 5G சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் தற்போது பலரும் BSNL நிறுவனத்திற்கு திரும்பி வருவதால் மலிவு விலையில் BSNL பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறது.
இதில் வெறும் ரூ.91 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்து நீண்ட கால சேமிப்பை வழங்கும் திட்டத்தை BSNL கொண்டு வந்துள்ளது.
இந்த ரூ.91 திட்டத்தின் கீழ் சார்ஜர்கள் 60 நாட்கள் சேவையை பெற முடியும் , மேலும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 15 பைசாவும், ஒரு எம்பி டேட்டாவிற்கு 1 பைசாவும், ஒரு செய்திக்கு 25 பைசாவும் வசூலிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் மலிவாக டாப்-அப் செய்ய விரும்பினால் மற்றும் உங்கள் சிம் கார்டு நீண்ட நேரம் செயலில் இருக்க விரும்பினால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி நீங்கள் டாப் அப் செய்யலாம். டேட்டா, அழைப்பு வவுச்சர்கள், கூடுதல் டேட்டா போன்ற திட்டங்களை மலிவு விலையிலும் ரீசார்ஜ் செய்யலாம்.