இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் ‘தி கோட்’ திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாக உள்ளது. இப்படம் கேரளாவில் முதல் நாளில் 700 க்கும் அதிகமான திரைகளில் 4,000 க்கும் அதிகமான காட்சிகள் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. கேரளாவில் முதல் நாளிலேயே மிக அதிகமான திரைகளில் வெளியாகும் என்ற சாதனையை இப்படம் படைக்க உள்ளது. இது குறித்த பதிவினை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.