இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் படம் வாழை. உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “வாழை” படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும், படைப்பாளி மாரி செல்வராஜ் பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என்றும் பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here