நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘பதான், ஜவான்’ படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் வேட்டை செய்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
மேலும், “சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது”, என்று பாராட்டி உள்ளார். “தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணி உள்ளது, நான் அதை மிகவும் ரசித்தேன். அது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது, என்று பாராட்டி பேசியுள்ளார்.