தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்த போது
“அரசு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் 15 முதலீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் ரூ.44,125 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது . மொத்தமாக 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24.7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும்
இதில் ஆட்டோமொபைல் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதைதொடர்ந்து ஈரோட்டில் ரூ.1,707 கோடி மதிப்பில் பால் ஆலையும், தமிழ்நாடு காற்றாலை மின் கொள்கை உட்பட மூன்று முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காற்றாலைகளை புதுப்பித்தல் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.