சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் பூச்சி முருகன், கார்த்தி மற்றும் கருணாஸ் இன்று ரஜினியின் வீட்டில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானதால், இந்த சந்திப்பை நடத்துவதற்கான காரணம் குறித்து நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம்.