கோலிவுட்டில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. 45 வயதை எட்டியுள்ள பிரேம்ஜி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டன்று, இந்த வருடம் தான் திருமணம் செய்துகொள்வதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மணப்பெண் குறித்து அவர் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகவும், இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த பத்திரிக்கையில் மணப்பெண் பெயர் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜூன் 9ஆம் தேதி திருத்தனி முருகன் கோயிலில் திருமணம் நடக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையா அல்லது விளையாட்டுக்காக செய்துள்ளனாரா என்பது தெளிவாக தெரியவில்லை.