விஜய் சேதுபதியின் 50 -வது படமாக ‘மகாராஜா’ படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.இந்த நிலையில், ‘மகாராஜா’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here