புத்தக கொள்முதல் முறைகேடு: அதிகாரிகள் மீது வழக்குப் பதியாதது ஏன்? – நீதிபதி கேள்வி

Priya
7 Views
1 Min Read

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதியாதது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பூந்தமல்லி தவெக எம்எல்ஏ பிரகாசம் என்ற குட்டி, தவெக மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டது குறித்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது இன்னும் வழக்குப் பதியாதது ஏன் என்றும் புத்தகக் கொள்முதலுக்கான உத்தரவு பிறப்பித்தது யார் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் போலீஸார் வேகமாக செயல்படுவதாகவும் நீதிபதி குற்றம்சாட்டினார்.

அதற்கு அரசு தரப்பில், புத்தக கொள் முதல் முறைகேடு குறித்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, நவ.23-ல் பதில் மனு தாக்கல் செய்வதாக கூறப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply