இனியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், ‘வன்னி’. பெண் போராளியின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும், பெண்களின் உரிமைகளையும் பேசும் இப்படத்தை செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் மற்றும் சுக்கிரன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்து, இயக்குகிறார்.
இதில் கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். வாகீசன் ராசைய்யா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார், மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.

