அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Priya
596 Views
1 Min Read

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் 400 கோடி ரூபாய் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கடந்த அக்டோபர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை, நவம்பர் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அன்பில் மகேஸ் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்ப சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 10-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான சரவணன் நேற்று சரணடைந்துள்ளார்’ என தெரிவித்து, மகேஸ் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 17-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply