‘அர்​ஜுன் தாஸுடன் நடிப்பது சவாலாக இருந்தது’ – சஞ்சனா நடராஜன்

Priya
706 Views
1 Min Read

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. மதுமிதா இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். முஜீப் மஜீத் இசையமைத்​துள்​ளார். அர்கா மீடியா வொர்க்ஸ் சார்​பில் ஷோபு யார்​ல​கட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்​துள்​ளனர். இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

நடிகை சஞ்​சனா நடராஜன் கூறும்​போது, ‘‘அர்​ஜுன் தாஸுடன் நான் நடிக்​கும் 2-வது படம் இது. இதில் நாங்​கள் போலீஸ் அதி​காரி​களாக நடித்​திருப்​பது மகிழ்ச்​சி​யையும் பெரு​மையையும் அளிக்​கிறது. அர்​ஜுன் தாஸ் படப்​பி​டிப்​புத் தளத்​தில் ஜாலியாகவும் கல​கலப்​பாகவும் இருப்​பார். அவருடன் சீரியஸான காட்​சிகளில் நடிப்​பது கூட சில நேரங்​களில் சவாலாக இருக்​கும்.

அவருடன் மீண்​டும் பணி​யாற்​றியது சிறப்​பான அனுபவம். இந்​தப் படத்​துக்​காக சுமார் 35 நாட்​கள் தொடர்ந்து பணி​யாற்றினேன். இது​வரை பணி​யாற்​றிய குழுக்​களில் மிகவும் திட்​ட​மிட்​டும் நேரத்தை வீணாக்​காமலும் திறமையாகவும் பணி​யாற்​றிய குழு இது​தான்.

தினமும் படப்​பி​டிப்​புக்​குச் செல்​வதே உற்​சாக​மாக இருக்​கும். குறிப்​பாக, படக்​குழு​வில் நிறைய பெண்​கள் இருந்​தது கூடுதல் மகிழ்ச்சி. சென்​டிமென்ட் கலந்த சைக்​கலாஜிக்​கல் திரில்லர் திரைப்​படம் இது. படத்​தைப் பார்த்​தவர்​கள் நன்​றாக இருப்​ப​தாகத் தெரி​வித்​துள்​ளனர். இப்​படம் ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும்” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply