ஆப்பிள் ஐபோனுக்குப் பிறகு, Google’s Pixel ஸ்மார்ட்போன் Dixon Technologies மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இது நாட்டின் ‘Make in India’ திட்டத்திற்கும் மின்னணு உற்பத்தி முயற்சிக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தன்னை நிலைநிறுத்துவும் பலப்படுத்தும், Apple தன்னுடைய உற்பத்தியை சீனாவிலிருந்து தற்போது இந்தியாவில் செயல்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் Google Pixel இந்தியாவில் தயாரிப்பை தொடங்க உள்ளதாக கூறியிருந்தது.
Nokia, Xiaomi மற்றும் Motorola உட்பட பல பிராண்டுகளுக்காக ஸ்மார்ட்போன்களை Dixon தயாரித்து வருகிறது.
இந்நிலையில் Dixon நிறுவனம் இந்தியாவில் Google Pixel ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை அடிப்படையில் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக் கூறும் போது, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் தங்களின் நம்பகமான பங்களிப்பு ‘Make in India’ திட்டத்திற்கான ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.