ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

Priya
724 Views
1 Min Read

அமெரிக்​கா​வுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, இந்​தி​யாவில் தரை, கடல், வான்​வழி போக்​கு​வரத்து, பாது​காப்பு பயன்​பாட்​டுக்கு உதவும் ‘இந்​திய மண்​டல வழிகாட்​டுதல் செயற்​கைக்​கோள் அமைப்பு’ (ஐஆர்​என்​எஸ்எஸ்) உரு​வாக்க இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) முடிவு செய்​தது.

இதற்​காக ஐஆர்​என்​எஸ்எஸ் வரிசையில் 7 செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட வேண்​டும். அப்​போது​தான் அதன் கட்​டமைப்பு முழுமை பெற்று துல்​லிய​மான தகவல்​களை பெறமுடியும்.

அவ்​வாறு இது​வரை ஏவப்​பட்ட 11 வழிகாட்​டுதல் செயற்​கைக் கோள்​களில் 3 மட்​டுமே தற்​போது பயன்​பாட்​டில் உள்​ளன. பழுதடைந்த செயற்​கைக் கோள்​களுக்கு மாற்​றாக புதிய செயற்​கைக் கோள்​களை தயாரித்து இஸ்ரோ தற்​போது விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது.

அதன்​படி இஸ்ரோ வடிவ​மைத்​துள்ள என்​விஎஸ்-03 (ஐஆர்​என்​எஸ்எஸ் 1 எல்) வழிகாட்டி செயற்​கைக் கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்​கெட் மூலம் ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்​தின் 2-வது ஏவுதளத்​தில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்​பட உள்​ளது.

இதற்​கான கவுன்ட்-டவுன் நேற்று இரவு தொடங்​கியது. என்​விஎஸ் செயற்​கைக் கோள் 2,250 கிலோ எடை கொண்​டது. இது புவி ஒத்​திசைவு சுற்​றுப் பாதையில் நிலைநிறுத்​தப்​பட உள்​ளது. ​

நாட்​டின் பாது​காப்பு மற்​றும் மக்​கள் பயன்​பாட்​டுக்​கான துல்​லிய​மான இருப்​பிடம், வழிகாட்​டுதல் மற்​றும் நேர சேவை​களை இந்த செயற்​கைக் கோள் வழங்​கும். உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட அதிதுல்​லிய அணு கடிகாரம் இதில் பொருத்​தப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply