சென்னையில் மின்வெட்டை தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: மின்வாரியம் நடவடிக்கை

Priya
706 Views
1 Min Read

வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக சென்​னை​யில் மின்​வெட்​டைத் தடுக்க 2,600 ஒப்​பந்த ஊழியர்​களை மின்​வாரியம் நியமனம் செய்துள்ளது.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​யுள்ள நிலை​யில் சென்னை மற்​றும் அதன் புறநகர் பகுதி​களில் மின்​வாரியப் பணிகளை விரைவுபடுத்​தும் வித​மாக கடந்த இரண்டு வாரங்​களில் 2,600 ஒப்​பந்த ஊழியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இவர்​களுக்கு உரிய பயிற்​சிகள் அளிக்​கப்​பட்டு, இரவு நேரங்​களி​லும் மின்​பாதைகளைக் கண்​காணித்து பழுதுகளைச் சரிசெய்​யும் பணிகளில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

மேலும், உள்​ளூர் தேவைக்​கேற்ப மாநிலம் முழு​வதும் ஒப்​பந்த ஊழியர்​களை தற்​காலிக​மாகப் பணி​யமர்த்​திக் கொள்ள மேற்​பார்​வைப் பொறி​யாளர்​களுக்​கும் மின்​வாரியம் அனுமதி வழங்​கி​யுள்​ளது.

40 சிறப்​புக் குழுக்​கள்

சென்​னை​யில் மின்​தடை புகார்​களுக்கு உடனடி தீர்வு காண சென்​னை​யில் 40 சிறப்​புக் குழுக்​கள், 300 பொறி​யாளர்​கள், 2,200 களப்​பணி​யாளர்​கள் தயார் நிலை​யில் உள்​ளனர்.

மேலும், தாழ்​வான பகுதி​களில் தண்​ணீர் புகு​வதைத் தடுக்க அடை​யாளம் காணப்​பட்ட 1,500 மின்​வி​நியோகப் பெட்​டிகளில் 80 சதவீத பெட்​டிகள் உயர்த்​தப்​பட்​ட​தாகவும் அத்​துடன், 20 ஆண்​டுகளுக்​கும் மேலான 1,600 மின்​மாற்​றிகளை மாற்​றவும் நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகவும் மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply