தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Priya
843 Views
1 Min Read

‘தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், ‘‘சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல்போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதல்வர் ஏன் மவுனமாக இருக்கிறார்?. சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?” என தெரிவித்துள்ளார்.

உதயநிதி, கனிமொழி கண்டனம்

உதயநிதி ஸ்டாலின்: அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் மே 4-ம் தேதிக்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை. இன்றைய கொலைப் பட்டியல் என்று நாளிதழ்களில் தனி பகுதி போடும் அளவுக்கு தினந்தோறும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.

சேலத்தில் ரவுடி டேவிட், சாத்தான்குளத்தில் ஒரு பெண், ஸ்ரீவைகுண்டத்தி

Share This Article
Leave a Comment

Leave a Reply