தன்னம்பிக்கையுடன் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை

Priya
645 Views
1 Min Read

நாம் தன்னம்பிக்கையுடன் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் களப்பயணம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான கல்லூரி களப் பயணத்தின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.

இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், அண்ணா பல்கலை. பதிவாளர் குமரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: நான் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின்னர் அடுத்து என்ன படிக்கலாம் என்று தவித்தபோது போதுமான விழிப்புணர்வு இல்லை. வழிகாட்டுதலும் கிடைக்கவில்லை.

எனது தந்தை, பிஏ தமிழ், விசுவல் கம்யூனிகேஷன் என நிறைய படிப்புகளை கூறினார். நீ தப்பித்தவறிக்கூட பொறியியல் மட்டும் சேர்ந்துவிடாதே எனவும் சொன்னார். இப்படி என்னை குறைத்து எடைபோட்டுவிட்டார்களே என நான் நினைத்து பொறியியலில் சேர்ந்து படித்தேன்.

அதேநேரம் சேர்ந்த 4 நாட்களிலேயே இந்த ஜென்மத்தில் நான் பொறியாளராவது கடினம் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், விடாமுயற்சியுடன் படித்து முடித்தேன்.

தன்னம்பிக்கை ஒன்று இருந்தால்போதும், வாழ்க்கையில் நாம் வெற்றி பெறலாம். நமது கனவுகளுக்கு கொஞ்சம் உழைப்பையும், ஈடுபாட்டையும், தன்னம்பிக்கையையும் சேர்த்து கொடுத்தால் வெற்றிபெற முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply