தமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் புகார்: அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

Priya
546 Views
2 Min Read

தமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் புகாரைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் அதிகாரிகள் ஆதாயம் பெறுவதாகவும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாகவும், பரிசுப் பொருட்கள் பெறப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.

சில அலுவலகங்களில் கதவுகள் மூடப்பட்டு, ஊழியர்களின் செல்போன்கள் பெறப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த வகையில், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் ரூ.1.49 லட்சம் தொடர்பான சந்தேகத்துக்குரிய யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.9,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் திருவாரூரில் 65 ஆயிரம், மயிலாடுதுறையில் 29 ஆயிரம், அரியலூரில் 20 ஆயிரம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

மதுரை மேலூர், சிவகங்கை தேவகோட்டை, தேனி சின்னமனூர், பரமக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஓசூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

மேலும், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல அலுவலகங்களில் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் ரூ.1.23 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.25 லட்சம், புதுக்கோட்டையில் ரூ.37 ஆயிரம், கடலூரில் ரூ.1.5 லட்சம், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் ஜிபே மூலம் ரூ.1.44 லட்சம் பரிவர்த்தனை ஆகிய சந்தேகத்துக்குரிய யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரிக் கப்பட்டு வருகிறது.

இதேபோல், பல்வேறு அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு, சந்தேகத்துக்குரிய யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக் காலத்தில் நடைபெற்ற இந்தத் திடீர் சோதனை அரசு அலுவலகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் 3-வதுமுறையாக அரசு அலுவலகங் களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply