தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Priya
721 Views
1 Min Read

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம், வரும் அடுத்த ஆண்டு மார்ச் 5 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தேசிய விருது வென்ற இயக்குநர் வேணு யெல்தண்டி இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. ‘பலேகம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேணு யெல்தண்டி இப்படத்தை இயக்குவதால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புத் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தில்ராஜு வழங்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிப்பதுடன் இசையமைக்கவும் செய்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply