தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்… சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் உயிரிழப்பு!

Priya
795 Views
1 Min Read

இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரது சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உயிரிழந்தார். அவருக்கு வயது 37. திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘குளிர் 100’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘உதயம் NH4’, ‘காதல் சொல்ல வந்தேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோவுக்கு நண்பராக நடித்து கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சபேஷ். இவர் மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகன்.

இந்நிலையில், 37 வயதான கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். துணை கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். குறிப்பாக சித்தார்த்தின் ‘உதயம் NH4’, ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்கள் கார்த்திக் சபேஷுக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது.

கடந்த ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 17-ம் தேதி இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரது சகோதரர் சபேஷ் மகன் கார்த்திக் சபேஷ் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply