கேரளாவில் விரலுக்கு பதிலாக நான்கு வயது குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறக்கும் போதே கூடுதல் விரலுடன் பிறந்து சிரமத்திற்கு ஆளான நான்கு வயது சிறுமி அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு மருத்துவர் பெஜான் தான்சன் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து நாக்கு கட்டப்பட்ட நிலையில் வெளிவந்த சிறுமியை பார்த்த பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அதில் சிறுமிக்கு விரலில் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை மாறுதலாக நாக்கில் செய்தது தெரியவந்தது. இதே பெயரைக் கொண்ட மற்றொரு சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டதால் இந்த சிறுமிக்கு மாற்றி தவறுதலாக விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சிறுமியை மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவளுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை ஊடகங்கள் பேசு பொருளாக எடுத்துச் சென்றதையடுத்து டாக்டர் ஜான்சன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்லூரி நிர்வாகமும் அவரை உடனடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.