மின் கட்டணத்தை அலுவலகத்துக்கு நேரில் சென்று செலுத்துவது மற்றும் ஆன்லைன் வாயிலாக செலுத்துவது ஆகிய நடைமுறைகள் ஏற்கெனவே இருந்து வருகின்றன.
மின்கட்டணம் செலுத்துவதற்கு புதிய நடைமுறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.மின் கட்டணத்தை அலுவலகத்துக்கு நேரில் சென்று செலுத்துவது மற்றும் ஆன்லைன் வாயிலாக செலுத்துவது ஆகிய நடைமுறைகள் ஏற்கெனவே இருந்து வருகின்றன.
இந்நிலையில், மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர், இனி வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளதுஅந்தவகையில் 500 யூனிட்டுகளுக்கு மேல் கட்டணம் செலுத்தும் நுகர்வோர், வாட்ஸ்அப்பில் யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நுகர்வோர், வாட்ஸ்அப்பில் டான்ஜெட்கோவின் இலச்சினை, பச்சை குறியீடு மற்றும் அதிகாரப்பூர்வ எண்ணை சரிபார்த்து, கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.