அமைச்சர்கள் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் கூட மின்தடை; போர்க்கால நடவடிக்கை வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

Priya
714 Views
2 Min Read

அமைச்சர்கள் பங்​கேற்ற பரப்​புரைக் கூட்​டத்​தில் கூட மின்​தடை ஏற்​படு​வ​தாக​வும், மின்​வெட்டை சரிசெய்ய போர்க்​கால நடவடிக்​கை​களை தமிழக அரசு மேற்​கொள்ள வேண்​டும் எனவும் பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் தொகு​தி​யில் நடை​பெற்ற தேர்​தல் பரப்​புரை கலந்​தாய்வுக் கூட்​டத்​தில் செங்​கோட்​டையன், அருண்​ராஜ் உள்​ளிட்ட 5 அமைச்​சர்​கள் பங்​கேற்ற நிலை​யிலும் கூட்​டத்​தின் போது மின்​தடை ஏற்​பட்​டிருக்​கிறது.

சென்னை தொடங்கி தமி​ழ​கத்​தின் அனைத்துப் பகு​தி​களி​லும் அறிவிக்​கப்​ப​டாத மின்​வெட்டு இருக்​கிறது. கோவை​யில் அறிவிக்​கப்​ப​டாத மின்​வெட்​டு, மின் அழுத்த பிரச்​சினை காரண​மாக ரூ.30 கோடி மதிப்​புள்ள இயந்​திரங்​கள் சேதமடைந்​துள்​ளன.

வழக்​கத்தை விட மின்​சா​ரத்​தின் தேவை அதி​க​மாக இருப்​பது தான் மின் வெட்​டுக்கு காரணம் என்​றும், அதை சமாளிக்க 2000 மெகா​வாட் மின்​சா​ரம் வெளிச்​சந்​தையி​லிருந்து வாங்​கப்​படு​வ​தாக​வும், அதனால் மின்​வெட்டு சீராகி விட்​ட​தாக​வும் தமிழக அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனாலும், கிரா​மப்​புறங்​களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்​சா​ரம் நிறுத்​தப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. மின்​வெட்டை சரி செய்​வது சாத்​தி​யமில்​லாத செயல் அல்ல.

தேசிய சந்​தை​யில் இருந்​தும், தமி​ழ​கத்​தின் தனி​யார் மின்​னுற்​பத்தி நிலை​யங்​களி​லிருந்​தும் கூட மின்​சா​ரம் வாங்க முடி​யும். ஆனால், அதற்​கான நடவடிக்​கை​கள் அரசு மேற்​கொள்​ளாதது தான் மின் தடைக்கு காரணம்.

மின்​சார வாரி​யத்​தில் முதல்​வர் விஜய் நேரடி​யாக ஆய்வு செய்​தும் மின்​வெட்டு தொடர்​வதை ஏற்​க​முடி​யாது. மின்​வாரி​யம் இனி​யும் அலட்​சி​யம் காட்​டா​மல், போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்​கை​களை மேற்​கொண்டு மின்​வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

அவர் வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “கா​விரி பாசன மாவட்​டங்​களில் அடுத்த சில நாட்​களில் மழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்ள நிலை​யில், தஞ்​சாவூர், திரு​வாரூர் உள்​ளிட்ட காவிரி பாசன மாவட்​டங்​களில் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் 6 லட்​சத்​துக்​கும் கூடு​தலான நெல் மூட்​டைகள் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்​கிக் கிடப்​ப​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. போதிய கிடங்கு வசதி​கள் இல்​லாததும், நெல் மூட்​டைகள் உடனுக்​குடன் அகற்​றப்​ப​டாததும் நெல் கொள்​முதலை பாதிக்​கிறது.

கொள்​முதல் நிலை​யங்​களுக்கு வரும் நெல் மூட்​டைகளை உடனுக்​குடன் கொள்​முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.” என்று வலி​யுறு​த்​தி​யுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply