மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம்

Priya
707 Views
1 Min Read

மதுராந்தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, தமிழக முதல்​வர் விஜய் இன்று (செப். 25) தொழுப்​பேடு பகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்ய உள்​ளார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, பல்​வேறு அமைச்​சர்​கள் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழக முதல்​வர் விஜய் இன்று தவெக வேட்​பாள​ருக்கு ஆதர​வாக தொழுப்​பேடு பகு​தி​யில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட​வுள்​ளார். இதற்​காக அப்​பகு​தி​யில் சுமார் 45 ஏக்​கர் பரப்​பள​வில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதில் 30 ஏக்​கர் இடம் வாகன நிறுத்​தத்​துக்​கும் மீத ​முள்ள இடம் தொகு​திக்கு உட்​பட்ட மக்​கள் நாற்​காலி​யில் அமர்ந்து கூட்​டத்​தில் கலந்​து ​கொள்​வதற்​கும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் பங்​கேற்​கும் கூட்​டம் மாலை 4 மணியி​லிருந்து 7 மணிவரை நடை​பெறவுள்​ள​தால், அப்​பகு​தி​யில் பல்​வேறு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

திருச்​சி-சென்னை செல்​லும் தேசிய நெடுஞ்​சாலை​யில் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​ப​டா​மல் இருப்​ப​தற்​காக, போலீ​ஸார், மாவட்ட நிர்​வாகம் சார்​பில் பல்​வேறு மாற்று ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் மு.வீரப்​பன்​ தெரி​வித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply